மட்டக்களப்பு மாவட்டத்தில், செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள ‘பவானி ட்ரேடிங்’ (Bhawani Trading) வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை, 09.01.2026) அதிகாலை பாரிய கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில், வர்த்தக நிலையத்திலிருந்து சுமார் 45 இலட்சம் ரூபாய் பணம், அத்துடன் 5 பவுண் நிறையுள்ள தங்க நகைகள் மற்றும் ஆபரணங்கள், அத்துடன் கடையில் இருந்த பெறுமதியான விற்பனைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த பாரிய கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















Leave a Reply