உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு, இன்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலும் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
காலை வேளையில் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஆலய முன்றிலில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பொங்கப்பட்டு, சூரிய பகவானுக்குப் படையலிடப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, பேரிடர்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், நாட்டு மக்களுக்கு நல்லாசி கிடைக்கவும், விவசாயிகள் சிறந்த விளைச்சலைப் பெறவும் வேண்டி மாமாங்கேஸ்வரப் பெருமானுக்கு விசேட பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.
இன்றைய விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன், ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர். இதேவேளை, இன்று அதிகாலை முதல் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு சூரியனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

















Leave a Reply