இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்) இரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வு பெற்றுள்ளார்.
எக்ஸில் இன்று அறிவிப்பை மேற்கொண்ட 38 வயதான அஷ்வின், பல்வேறு லீக்குகளை ஆராய ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஐ.பி.எல்லில் 187 விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றியிருந்தார். இவ்வாண்டு சென்னை சுப்பர் கிங்ஸுக்குத் திரும்பியிருந்த அஷ்வின் ஒன்பது போட்டிகளிலே விளையாடி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
