thenakam.live

Daily News

Advertisement

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக 8 இலட்சம் அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது அட்டை விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 240,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு, அவற்றை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் அனைவருக்கும், எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் நிரந்தர அட்டைகளை அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அட்டை தட்டுப்பாடு காரணமாக சுமார் 4.5 இலட்சம் பேருக்குத் தற்காலிக அனுமதிப்பத்திரங்களே வழங்கப்பட்டிருந்தன.

இதில் எஞ்சியுள்ள 210,000 அட்டைகளும் பெப்ரவரி இறுதிக்குள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும். பொதுவாக மாதத்திற்கு 60,000 முதல் 80,000 புதிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படுகின்றன.

தற்போது போதியளவு அட்டைகள் ஓடர் செய்யப்பட்டுள்ளதால், இனிவரும் காலங்களில் அட்டை தட்டுப்பாடு (Card Crisis) ஏற்படாது என ஆணையாளர் நாயகம் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *