thenakam.live

Daily News

Advertisement

கல்வி அமைச்சருக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கும், கல்வி அமைச்சருக்கும் எதிர்ப்புத் தெரிவித்து “இலவசக் கல்வியைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தன. 

மத்துகமையில் அமைந்துள்ள இலவசக் கல்வியின் தந்தை சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவின் உருவச்சிலைக்கு முன்பாகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவை தமது பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி, பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை (மக்கள் மனு) ஒன்றும் இதன்போது மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து தலைவர்கள் கன்னங்கரவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *