thenakam.live

Daily News

Advertisement

நுண்கடன் பிரச்சினைக்கு புதிய சட்டமூலம்

நுண்கடன் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி தெரிவித்துள்ளார். 

நுண்கடன் பெற்ற சுமார் 200 பெண்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி இதனைக் குறிப்பிட்டார். 

இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் பெயர் மற்றும் சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி வைப்பாளர்களிடம் பல மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

போலியான கையடக்கத் தொலைபேசி செயலி (Mobile App) ஊடாக இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் சிரேஷ்ட உப தலைவர் நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் இந்த மோசடி இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது இது குறித்து அதிக கவனம் செலுத்துமாறு வைப்பாளர்களிடம் கோரிக்கை விடுப்பதாக நிரோஷன் விஜேசுந்தர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *