thenakam.live

Daily News

Advertisement

பலாங்கொடை நகர சபை தவிசாளர் திடீர் ராஜினாமா

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள பலாங்கொடை நகர சபையின் தவிசாளர் கே.ஜி. பிரேமதாச இன்று (06) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இன்று காலை சபையின் மாதாந்த கூட்டம் நகர சபை தவிசாளரின் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது அவர் வழமை போன்று சபையை வழிநடத்தியதுடன், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் பதிலளித்திருந்தார். 

பிற்பகல் வேளையில் நிகழ்ச்சி நிரலின் இறுதி அங்கமாக தவிசாளரின் உரை இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக தான் தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

சபை உறுப்பினர்கள் அவரை பதவியிலிருந்து விலக வேண்டாம் என கேட்டுக்கொண்ட போதிலும், அதனை ஏற்காத அவர் தனது உத்தியோகபூர்வ அறைக்குச் சென்று, தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு சபையிலிருந்து வெளியேறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *