‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், “டித்வா” புயலினால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் மற்றும் நஷ்டஈடு வழங்கும் பணிகள் நாளை (09) ஆரம்பமாகவுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் கல்நேவ, ஹந்துங்கம, ராஜாங்கனை – சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நிக்கவெரட்டிய , விதிகுலிய சந்தி மற்றும் ரிதிகம – தொடம்கஸ்லந்த ஆகிய பிரதேசங்களில் இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.
“டித்வா” புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


























Leave a Reply