நீதித்துறை அதிகாரிகளின் நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவியுயர்வுகள் குறித்து விசாரணை செய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சி விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிராகரித்துள்ளார்.
இன்று (09) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.
தமது தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர், நீதித்துறையின் விவகாரங்களில் தலையிடுவதற்கு சட்டவாக்கத்திற்கு அதிகாரம் இல்லையெனக் குறிப்பிட்டார்.
அத்தகைய குழுவொன்றை நிறுவுவது, அதிகாரப் பகிர்வு தொடர்பான அரசியலமைப்பு கொள்கையை மீறுவதாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்


























Leave a Reply