உலகின் மிகப்பெரிய மின்சார வாகன (EV) விற்பனையாளராக எலான் மஸ்க்கின் டெஸ்லாவை சீனாவின் BYD நிறுவனம் பின்தள்ளியுள்ளது.
வருடாந்த விற்பனையில் தனது அமெரிக்கப் போட்டியாளரை BYD நிறுவனம் முறியடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
2025 ஆம் ஆண்டில் டெஸ்லா கார் விற்பனை கிட்டத்தட்ட 9% குறைந்து, உலகளவில் 1.64 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கார் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியாகும்.
இந்தப் புள்ளிவிபரங்களுக்கு அமைய BYD நிறுவனம், டெஸ்லாவை பின்தள்ளியுள்ளது.
கடந்த ஆண்டில் தனது மின்கலத்தால் இயங்கும் கார் விற்பனை கிட்டத்தட்ட 28% அதிகரித்து 2.25 மில்லியனுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக BYD நிறுவனம் தெரிவித்திருந்தது.
புதிய அறிமுகங்களுக்குக் கிடைத்த கலவையான வரவேற்பு, மஸ்க்கின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான அதிருப்தி மற்றும் சீனப் போட்டியாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் போட்டி ஆகியவற்றால் டெஸ்லா நிறுவனம் இவ்வாறு பின்தங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.






















Leave a Reply