thenakam.live

Daily News

Advertisement

2026-ல் உலகம் சந்திக்கவுள்ள மாற்றங்கள்!

2026-ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

இயற்கை பேரழிவுகள், உலகப் போர், செயற்கை நுண்ணறிவு அபாயம், பொருளாதார நெருக்கடி, அந்நிய உயிரினங்களுடன் தொடர்பு போன்றவை அவரது தீர்க்கதரிசனங்களில் இடம்பெற்றுள்ளன.

புகழ்பெற்ற பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்கா 2026-ஆம் ஆண்டுக்கான தனது கணிப்புகளால் உலகம் முழுவதும் மீண்டும் பேசப்படுகிறார்.

“பால்கன் நோஸ்ட்ரடாமஸ்” என அழைக்கப்படும் இவர், முன்பு இளவரசி டயானாவின் மரணம், 9/11 தாக்குதல், COVID-19 போன்ற பல நிகழ்வுகளை துல்லியமாக கணித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

2026-ம் ஆண்டுக்கான அவரது முக்கியமான கணிப்புகள்:

பெரும் இயற்கை பேரழிவுகள்: 2026-ல் சில சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், கடுமையான காலநிலை மாற்றங்கள் ஏற்படும் என கணித்துள்ளார்.

உலகப் போர் 3: இந்த ஆண்டில் சர்வதேச அரசியல் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு எச்சரிக்கை: மனிதக் கட்டுப்பாட்டை மீறி AI வளர்ச்சி இருக்கும் என கணித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி: உலகளாவிய சந்தைகளில் அதிர்ச்சி நிலவும் என கூறியுள்ளார்.

வேற்றுகிரக தொடர்பு: 2026-ல் மனிதர்கள் முதன்முறையாக அந்நிய (வேற்றுகிரக) உயிரினங்களை சந்திக்கலாம் என கணித்துள்ளார்.

ஆசியாவின் எழுச்சி: உலக சக்தி சமநிலையில் மாற்றம் ஏற்படும் என கூறுகிறார்.

இந்த கணிப்புகள் உண்மையா, கற்பனையா என்பது விவாதத்திற்குரியது. ஆனால், உலகம் எதிர்கொள்ளும் அரசியல், தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் சவால்கள் காரணமாக பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *