thenakam.live

Daily News

Advertisement

உலகம் அழியும் எனக் கூறிய எபோ நோவா கைது

மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள நாடுதான் கானா. அதன் தலைநகரம் அக்ரா ஆகும். 

இந்த ஊரில் இவான்ஸ் எஷுன் என்ற நபர், தன்னை ‘எபோ நோவா’ என்று அழைத்துக்கொண்டு, 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்று கூறி பீதி கிளப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கானா பொலிஸின் இணையவழி குற்றப் பிரிவு நேற்று (31) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவர் தன்னை தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்டு, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியமையே கைதுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. 

எபோ நோவா கடந்த ஆகஸ்ட் மாதம் பெரிய மரக் கப்பலை கட்டும் வீடியோக்கள் வைரலாகி உலக அளவில் பிரபலமானார். 

நத்தார் தினத்தில் என்னுடைய வேண்டுதலை கடவுள் ஏற்றுக்கொண்டு விட்டார். அதனால் உலகை அழிக்கும் முடிவை கடவுள் ஒத்திவைத்திருக்கிறார் அதனால் தொடர்ந்து இன்னும் பல கப்பல்களை கட்டப் போகிறேன். 

அதற்கு எனக்கு கடவுள் போதிய நேரம் கொடுத்திருக்கிறார் என்று கூறிய அவர் நோவாவை தேடி வந்த மக்களிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் மகிழ்ச்சியாய் இருங்கள் என கூறினார். 

இதனால் மக்கள் கோபடைந்தனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். 

இந்தநிலையில் அவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

எபோ நோவா மழுப்பலாக வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கூறி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *