உலகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில்,பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி (Kiribati) குடியரசின் கிரிட்டிமாட்டி தீவு உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளது.
கிரிபாட்டி நாடு பல நேர வலயங்களை கொண்டிருந்தாலும், அதன் கிரிட்டிமாடி தீவு சர்வதேச திகதிக்கோட்டிற்கு மிக அருகில் உள்ளதால், உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்கும் இடமாகத் திகழ்கிறது.
2026 பிறந்தது
இலங்கை நேரப்படி நேற்று மாலை 3:30 அளவில் கிரிபாட்டி தீவில் நள்ளிரவு 12 மணிக்கு 2026 புத்தாண்டு பிறந்தது.
‘கிறிஸ்மஸ் தீவு’ என்றும் அழைக்கப்படும் இந்தத் தீவில் வசிக்கும் மக்கள், வாணவேடிக்கைகள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் 2026 ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
கிரிபாட்டியைத் தொடர்ந்து டோங்கா, சமோவா மற்றும் நியூசிலாந்தின் சத்தம் தீவுகள் (Chatham Islands) அடுத்தடுத்து புத்தாண்டை வரவேற்கவுள்ளன. இன்னும் சில மணிநேரங்களில் அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளன.
உலகிலேயே கடைசியாக அமெரிக்காவுக்கு அருகிலுள்ள மக்கள் வசிக்காத பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகளில் புத்தாண்டு பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






















Leave a Reply